நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி :
கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன்
நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிருக்கான கைப்பந்து (Hand Ball) போட்டி அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் அம்பாசமுத்திரம், அம்பை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 22 அணிகள் கலந்துகொண்டன.
24.10.2025 அன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் கோவில்பட்டி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 12 – 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
25-10-2025 அன்று நடை பெற்ற அரை இறுதிப் போட்டியில் தூத்துக்குடி ஏ.பி.சி.மஹாலக்ஷ்மி கல்லூரி அணியும் கோவில்பட்டி, கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், மோதின. இதில் கே.ஆர். கல்லூரி அணி 12 – 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், திருநெல்வேலி சாரதா கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 16 – 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்தது.
சாரதா கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணியினரை கல்லூரியின் தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்












