பள்ளிகளுக்கு இன்று விடுமுறை :
தருமபுரி மாவட்டத்தில்
தருமபுரி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழையாக பெய்தது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்ப அறிவுறுத்தியது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்யும் விதமாக 15.11.2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் இ.ஆ.ப அறிவித்துள்ளார்.












