கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத்திருவிழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத்திருவிழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் கலைத்திருவிழா குறிஞ்சி சாரல்’25 – பசுமையும் பாரம்பரியமும் என்னும் தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி முன்னிலை வகித்து, கலைத் திருவிழா உரையாற்றினார்.

மேலும் அவரது உரையில், மாணவர்கள் கல்வியுடன் கலைத்திறனும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், கலை என்பது மனிதனின் உள்திறன்களை வெளிப்படுத்தும் முக்கிய கருவி என்றும் குறிப்பிட்டார்.

இத்திருவிழாவிற்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சீத்தா மகேஸ்வரி மற்றும் வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவசக்தி கணேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைத்திருவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.

இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கலைப்புலத்தை வெளிப்படுத்தினர்.

கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, ரங்கோலி, தனி நடனம் போன்ற போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு பரிசுகளை பெற்றனர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தை கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தட்டிச்சென்றது.

போட்டியில் கலந்துகொண்டு அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாரதி, இணை ஒருங்கிணைப்பாளர் லில்லி, தமிழ்த்துறை பேராசிரியர் ரவீனா மாரி, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் சண்முகப்பிரியா, நந்தினி, மாரி செல்வி மற்றும் வணிகவியல் துறை முனைவர். அருண்குமார் மற்றும் முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த கலைத் திருவிழா, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்களை வெளிக் கொணர்ந்த ஒரு நிகழ்வாக அமைந்தது.