தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் ஏ. வி. வி. எம்.ஸ்ரீ புஷ்பம் கல்லூரி இணைந்து “கப்பல் போக்குவரத்து மற்றும் கண்டெய்னர் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை” பயிற்சி திட்டம் நடத்தியது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் ஏ. வி. வி. எம்.ஸ்ரீ புஷ்பம் கல்லூரி இணைந்து “கப்பல் போக்குவரத்து மற்றும் கண்டெய்னர் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை” பயிற்சி திட்டம் நடத்தியது

வ. உ. சிதம்பரம் கல்லூரியின் வணிகவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, தஞ்சாவூரிலுள்ள ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி – மேலாண்மைத் துறையின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை சேன் மேலாண்மை பிரிவுடன் இணைந்து 2025 அக்டோபர் 7 முதல் 11 ஆம் தேதி வரை ஐந்து நாள் மாணவர் பரிமாற்றப் பயிற்சித் திட்டம் “கப்பல் போக்குவரத்து மற்றும் கண்டெய்னர் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை” என்ற தலைப்பில் நடைபெற்றது.

லாஜிஸ்டிக்ஸ் துறையைச் சேர்ந்த தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் இதில் கலந்து கொண்டு விவாதங்கள், குழு கலந்துரையாடல்கள், “லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்-அப் ஹேக்கத்தான்” மற்றும் தொழில் நிலைய (CFS), கண்டெய்னர் டெர்மினல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்முறைகள் தொடர்பான வெளிப்பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற செயலாளர் ஏ. பி. சி.வீ. சொக்கலிங்கம் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு ஊக்கமளித்தனர்.

இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் தொழில் சார்ந்த அறிவு மற்றும் தொழில்முறை நலன்களை மேம்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது.