தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர் கல்வியில் 100 % சேர்த்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா : மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப தலைமையில் நடைபெறுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர் கல்வியில் 100 % சேர்த்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா :
மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப தலைமையில் நடைபெறுகிறது

கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் 100% சேர்த்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை தூத்துக்குடி அழகர் மகாலில் நடைபெறுகிறது.

மேலும் மாணவர்களின் உயர் படிப்பிற்கு உதவி செய்த அரசு ஊழியர்,ஆசிரியர் சங்கங்களுக்கான பாராட்டு விழாவும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இதில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் அனைத்துப் பள்ளி துணை ஆய்வாளர்கள்,ஆசிரிய பயிற்றுனர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கனவு கட்டுப்பாட்டு அறை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவருக்கும் இரவு விருந்து அளித்து கௌரவ படுத்துகிறார்.