தூத்துக்குடி தூய மாரியன்னை கல்லூரி வணிக மேலாண்மை துறை (சுயநிதி பிரிவு) மாணவிகளின் திறன் மேம்பாட்டுக் பயிற்சி

தூத்துக்குடி தூய மாரியன்னை கல்லூரி வணிக மேலாண்மை துறை (சுயநிதி பிரிவு) மாணவிகளின் திறன் மேம்பாட்டுக் பயிற்சி

தூத்துக்குடி தூய மாரியன்னை கல்லூரி சமூக மேம்படுத்த திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் 13.09.2025 அன்று தூய மாரியன்னை கல்லூரி வணிக மேலாண்மை துறை (சுயநிதி பிரிவு) இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் ராஜா பாண்டி நகர் சமூக வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டுக் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் saree prepleating கற்றுத்தரப்பட்டது.


கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசி, செயலாளர் அருட் சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் புலோமின் ரெஜி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வணிக மோலாண்மை துறை பேராசிரியர்கள் ஜான்சி ராணி, பால் ரோஜா மாணவிகளை வழிநடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிராம மக்கள் திறன் மேம்படும். மேலும் சமூக நலனில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.