தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வருக்கு ” பாரத் சிஷன் ரத்னா ” விருது :

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வருக்கு ” பாரத் சிஷன் ரத்னா ” விருது :

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் நலவாரியம், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சிறப்புப் பெற்ற நிறுவனம், பெங்களூருவில் அமைந்துள்ளது. அந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான “பாரத் சிக்ஷன் ரத்னா விருதை” தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு – க்கு செப்டம்பர் 5, 2025 அன்று வழங்கியுள்ளது.

இவ்விருது பற்றி முதல்வர் வீரபாகு தெரிவிக்கையில்

சமூகத்திற்கு உழைத்து, உயர்ந்த ஆசிரியத் தொழிலின் வழியாக மகத்தான பங்களிப்புகளைச் செய்த கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்தப் பரிசு எனக்கு மிகுந்த தாழ்மையான மகிழ்ச்சிமிகு தருணமாகும்.

இந்த விருதை நான் முழுமனதுடன் என் அன்பு பெற்றோர்களுக்கே அர்ப்பணிக்கிறேன்.
அவர்களின் ஆசீர்வாதங்களும் வழிகாட்டுதலும் இம்மகத்தான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல என்னை எப்போதும் ஊக்குவிக்கின்றன.

மேலும், நிர்வாகத்தினருக்கும்,பேராசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அவர்களின் தடையற்ற ஆதரவினாலும் ஒத்துழைப்பினாலும் தான் இப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று கூறினார்.