கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான உணவுத் திருவிழா

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான உணவுத் திருவிழா

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பாக மாணவர்களின் தொழில் மற்றும் விற்பனை திறனை மேம்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடைபெற்றது.

கல்லூரியின் அனைத்து துறை மாணவ மாணவிகள் சார்பில் பல்வேறு வகையான இயற்கை சார்ந்த உணவுகள், பிற உணவு பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர். இதன் மூலமாக இயற்கை உணவுகளின் மதிப்பினை உணரவும், கைவினை பொருட்களின் கலை நயத்தை விளக்கவும் இந்த உணவு திருவிழா மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

இவ்விழாவை கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் வழிகாட்டுதலின் படி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.