தூத்துக்குடியில் குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா

குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா தூத்துக்குடி விவிடி நினைவு பள்ளியில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள்நிகழ்ச்சித் தலைவரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்ட குழு உறுப்பினருமாகிய முனைவர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் நவநீத கண்ணன் எழுதிய தகாத வார்த்தைகள், ராகுலன் எழுதிய நினைவை உண்கிறேன், கொற்கை அ ஜூடின் எழுதிய காலப்பனை ஆகிய நூல்களை தேரிக்காட்டுஎழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் வெளியிட முனைவர். ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியை ஒட்டி ஓய்வு பெற்ற கருவூலத்துறை  அலுவலர் செய்யது முகமது ஷெரீப் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. குமிழ் முனை சைமன் நன்றி கூறினார்.