தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி 2025 ம் ஆண்டின் கல்லூரி தேசியத் தரவரிசைப் பட்டியலில் ( NIRF ) 22 வது இடம் பெற்றது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி 2025 ம் ஆண்டின் கல்லூரி தேசியத் தரவரிசைப் பட்டியலில் ( NIRF ) 22 வது இடம் பெற்றது

வ. உ. சிதம்பரம் கல்லூரி 2025 ஆம் ஆண்டு நிர்ஃப் (nirf Ranking) கல்லூரிகளுக்கான தேசியத் தரவரிசை பட்டியலில் 22 ஆவது இடம் பெற்றுள்ளது. 2019 ஆண்டிலிருந்து தொடர்ந்து தேசியத் தர வரிசை பட்டியலில் வ. உ. சிதம்பரம் கல்லூரி இடம் பிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 77 வது இடத்தையும், 2020 ஆம் ஆண்டு 68 ஆவது இடத்தையும், 2021 ஆம் ஆண்டு 54 வது இடத்தையும், 2022 ஆம் ஆண்டு 30-வது இடத்தையும், 2023 ஆம் ஆண்டு 27 வது இடத்தையும், 2024 ஆம் ஆண்டு 28 வது இடத்தையும், 2025 இல் தற்போது கல்லூரிகளுக்கானதேசியத் தரவரிசைப் பட்டியலில் 22 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NIRF (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முறையாகும். இந்த கட்டமைப்பு, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டதாரிகளின் வெளியீடு, விரிவாக்கம் மற்றும் உள்ளடக்கம், மற்றும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பிடுகிறது.

NIRF – பொருள்:

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) என்பதன் சுருக்கமே NIRF ஆகும்.

இந்திய கல்வி அமைச்சகத்தால் (முன்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்) இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு இந்த கட்டமைப்பு தொடங்கப்பட்டது.