தூத்துக்குடி கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் சுதந்திர தினத்தன்று பழைய காயல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மனு வழங்கியதோடு கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி பழைய காயல் பற்றாளர் ரவிச்சந்திரன் தலையிமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். அருட் சகோதரி ஜெஸி, செயலர் முனைவர். அருட் சகோதரி குழந்தை தெரேஸ்,துணை முதல்வர் முனைவர் அருட் சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட் சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஜோஸ்லின் பேராசிரியர்கள் முனைவர் ஷோபா மற்றும் முனைவர் நிரஞ்சனி ஆகியோர் வழி நடத்தினர்.












