தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் “உயிர்மெய்” என்னும் தலைப்பில் இலக்கிப் போட்டி :
பாளை தூய. சவேரியார் கல்லூரி சேம்பியன்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக ‘உயிர்மெய்’ என்னும் தலைப்பில் இலக்கியப் போட்டிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்றது.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 25 கல்லூரிகள் பங்கு பெற்றன. பெரும்பான்மை புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சேம்பியன் பரிசான வெள்ளி சுழற்கோப்பையை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வென்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு பரிசுகளை வழங்கினார்.












