தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் :

தூத்துக்குடி தஸ்நேவிஸ்மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினமானது தலைமையாசியை அருள் சகோதரி ஹேமலதா சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.

எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பல்வேறு மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்து விழாவினை சிறப்பித்தார்கள்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ரீத்தா உலக ஓசோன் தினத்தைப் பற்றியும், மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பினோலியா டாக்டர் ஏ பி ஜே . அப்துல் கலாமின் நினைவு நாளை பற்றி சொற்பொழிவு ஆற்றினாள்.

இசைக்குயில் மாணவிகள் உலக ஓசோன் தினத்தைப் பற்றி பாடல் பாடினார்கள். மேலும் தண்ணீர் சிக்கனத்தை பற்றி ஓவிய போட்டியும், கவிதை போட்டியும் நடைபெற்றது. பசுமை படை மாணவிகள் பள்ளி தோட்டத்தை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றினார்கள்.. தலைமை ஆசிரியர் பல்வேறு கருத்துகளை மாணவிகளுக்கு கூறிய பின்னர் இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகாய ஆனந்தி விண்ணரசியையும் பாராட்டினார்.

 

 

 

.