கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ராகிங் எதிர்ப்பு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலகு எண் 132 இணைந்து ராகிங் எதிர்ப்பு தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சியை 12.08.2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

“ராகிங்கிற்கு இல்லை என்று சொல்வோம் – பாதுகாப்பான, மரியாதையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளாகத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.

இந் நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு ராகிங்கின் தீமைகள், சட்ட நடவடிக்கைகள், மாணவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்பான மற்றும் அன்பான கல்விச்சூழலை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு வலியுறுத்தப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ராகிங் எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு, ராகிங்கை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ மாட்டோம் என்றும், சக மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வோம் என்றும் உறுதியேற்றனர்.

மேலும், ராகிங் சம்பவங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி ராகிங் எதிர்ப்பு மன்ற உறுப்பினர்கள், நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வத் தொண்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.