அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு ( 2026 – 2028 ) செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் : தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று நடைபெறுகிறது !

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு ( 2026 – 2028 ) செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் :
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று நடைபெறுகிறது !

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE 2009), அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC) மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாடுகள் குறி்த்து தெளிவான புரிதலை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படுத்த இந்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்படுகிறது.

இன்று 10 – 08 – 2026 திங்கட்கிழமை தூத்துக்குடி கே.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில் நடைபெறும் மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலை 09.45 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில் தொடங்கும் மண்டல அளவிலான இப் பயிற்சிக்கு உதவி திட்ட அலுவலர் முருகன் வரவேற்புரை வழங்குகிறார்.

இப்பயிற்சியில் கருத்தாளர்களாக பள்ளி மேலாண்மைக் குழு மாநில பொறுப்பாளர் ( தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள்) ரத்ன விஜயன் , பள்ளி மேலாண்மைக் குழு மாநில பொறுப்பாளர் ( தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்) பெர்னாட் கலந்து கொள்கின்றனர்.

மாலை 4.00 மணி வரை நடைபெறும் இப் பயிற்சிக்கு தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் வாழ்த்துரை வழங்க, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம நன்றியுரை வழங்குகிறார்.