இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் மற்றும் பிற மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
அடுத்து 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது .
25 – 03 – 2026 புதன்கிழமை 3 வது தேர்வாக கணிதம் ( கணிதவியல்) பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
30 – 03 – 2026 திங்கட்கிழமை 4 வது நாள் தேர்வாக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
இன்று 02 – 04 – 2026 வியாழக்கிழமை சமூக அறிவியல் ( Social Science) பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
காலை 09.45 மணிக்கு தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கட்டுகள் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு காலை 9.50 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.15 வரை நடைபெறும்.
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பாகும் . 15 வயது நிரம்பிய 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்க அதாவது தேர்ந்தெடுக்கும் அளவிற்கு போதிய திறன் இருக்காது.15 வயது என்பது சொல்வதை செய்யக்கூடிய வயதாகும்.
எனவே அவர்களது எதிர் காலத்தை நிர்ணயிக்க துணை போவதுதான் இந்த 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகும்.
இன்று எழுதும் தேர்வு ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் உயர்நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வாகும்.
இந்த தேர்வில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தாங்கள் அதிகமாக மதிப்பெண் வாங்கும் பாடம் தான் அவர்கள் மேல்நிலை மற்றும் உயர் கல்வியில் எந்த பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதனை நிர்ணயிக்கும்.
மாணவர்களுடைய அறிவுத்திறன் எதனை நோக்கி பயணிக்கிறது, அவர்கள் எந்த பாடத்தை தேர்ந்தெடுத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.அவர்கள் எண்ணம் எந்த லட்சியத்தை அடைய எண்ணுகிறது என்பதனை அவர்களுக்கு தெரியாத வயதில் புரிய வைப்பதிற்கும், அவர்களுடைய பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு எந்த படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளவும் இந்த 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே மாதம் 20 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது…🌹🌹🌹🙏🙏🙏
ஆசிரியர்
“கல்விச் செய்திகள் “












