இன்று தேசிய பென்சில் தினம்:
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் வழங்கப்பட்டது
இன்று தேசிய பென்சில் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (அறிவியல்) எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பென்சில் வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.
தேசிய பென்சில் தினம் (National Pencil Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இது எழுத்து, ஓவியம் மற்றும் வரைபடங்களுக்குப் பயன்படும் மிக எளிய மற்றும் முக்கியமான கருவியான பென்சிலின் சிறப்பைக் கொண்டாடும் நாளாகும்.
பென்சில் மனிதனின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், மனதில் உதிக்கும் கற்பனைத்திறனை காகிதத்தில் கொண்டு வரவும் உதவும் ஒரு நீண்டகாலக் கருவியாகும்.
1564-ல் இங்கிலாந்தில் கிராஃபைட் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் 1795-ல் நவீன பென்சில் வடிவம் பெற்றது.
பென்சிலின் முனையில் அழிப்பானை (Eraser) இணைத்ததற்கான காப்புரிமையை (Patent) 1858-ல் பெற்ற ஹைமன் லிப்மேன் (Hymen Lipman), ஜமைக்காவில் பிறந்தவர். ஆங்கிலேய பெற்றோரான இவர், 1829-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து பிலடெல்பியாவில் குடியேறி, அமெரிக்க குடிமகனாக தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்தார் .
ஒரு சாதாரண பென்சில் கொண்டு சுமார் 45,000 வார்த்தைகள் எழுத முடியும்.
இந்த நாளில் மக்கள் பென்சில் ஓவியங்கள் வரைந்து, புதிய பென்சில்களைப் பயன்படுத்தி தங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.












