இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் மற்றும் பிற மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
அடுத்து 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது .
25 – 03 – 2026 புதன்கிழமை 3 வது தேர்வாக கணிதம் ( கணிதவியல்) பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
இன்று 30 – 03 – 2026 திங்கட்கிழமை 4 வது நாள் தேர்வாக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
காலை 09.45 மணிக்கு தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கட்டுகள் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு காலை 9.50 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.15 வரை நடைபெறும்.
அறிவியல் பாடம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிரியல் போன்ற பெரும்பாலான பாடப் பிரிவுகளுக்கு ( Group) அடிப்படையானது. எனவே அறிவியல் மேல்நிலைப் பள்ளி படிப்புக்கும், உயர் கல்விக்கும் பெரும்பான்மையான பாட வகைகள் ( குரூப்) படிக்க முக்கிய காரணம் வகிக்கின்றது.
இன்று தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது…🌹🌹🌹🙏🙏🙏
ஆசிரியர்
“கல்விச் செய்திகள் “












