ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட த்திற்கு உள்ளூர் விடுமுறை :
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை
பங்குனி உத்திர திருநாள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்துக்களால் குல தெய்வத்தை வணங்கும் முக்கியப் பண்டிகை ஆகும்.
இந்த வருடம் பங்குனி உத்திரம் வரும் ஏப்ரல் 1 ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட ஏப்ரல் 1 ம் தேதியில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை ஆனது பொருந்தாது எனவும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 2 வது சனிக்கிழமை 11.4.2026 அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று நெல்லை ஆட்சியர் சுகுமார். இ.ஆ.ப. மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப. ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் கோரிக்கை:
மேலும் பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு:
பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் பௌர்ணமி மற்றும் உத்திரம் நட்சத்திரம் கூடும் புனித நாளாகும், இது பார்வதி-சிவன், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெறும் முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்பு நாளில், தமிழ் இந்து மக்கள் முருகன், சிவன், மற்றும் திருவரங்கநாதர் வழிபாடுகளை சிறப்பு பூஜைகள் மற்றும் காவடி ஆட்டத்துடன் மேற்கொள்கின்றனர்.
மேலும் தென் மாவட்டங்களில் குல தெய்வம் வழிபாடுகள் நடைபெறுகின்றது.












