தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி
தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியும் TMP அறக்கட்டளையும் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி 21.08.2025 மற்றும் 22.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் காமராஜ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் நாளான இன்று சுமார் 20 பள்ளிகளிலிருந்து 2000 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இரண்டாவது நாளான நாளை 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த கண்காட்சி காமராஜ் கல்லூரி மாணவர்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
கலை மற்றும் அறிவியல் துறைகளில் இருந்து பல்வேறு கண்காட்சி மாதிரி வடிவங்கள் மற்றும் செய்முறைகள் பள்ளி மாணவர்களை கவரும் வகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.













