தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கம்
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முதுகலை வேதியியல் ஆராய்ச்சித்துறை சார்பாக “வேதியியல் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள்” என்ற தலைப்பில் “சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி தலைமையுரையாற்றினார். வேதியியல் துறைத்தலைவர் முனைவர். கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரையாற்றினார். முனைவர்.தேவதாஸ், இணைப்பேராசிரியர், பயன்பாடு அறிவியல் மற்றும் மருந்தகத்துறை, பயன்பாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மஸ்கட், அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து முக்கியவுரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கு மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் முனைவர். தேவதாஸ், உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் வேதியியல் புதுமை என்ற தலைப்பிலும், முனைவர். கார்த்திக்குமார், வேதியியல்துறை உதவிப் பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை உயிரியல் ரீதியாக முக்கியமான சாக்கரைடுகள் மற்றும் மோரிட்டா பேலிஸ் ஹில்மேன் கூட்டுப்பொருட்களின் அடுக்கு வினைகள் குறித்து ஆற்றிய உரை மாணவியருக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.
வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். யோகேஸ்வரி நித்யா நன்றியுரை வழங்கினார்.
இந்த கருத்தரங்கை வேதியியல் துறைத்தலைவர் மற்றும் அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர். இக்கருத்தரங்கில் இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சித்துறை மாணவிகள் 192 பேர் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.












