தூத்துக்குடி DMNS. டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி தாமோதர நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள DMNS.Dr.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா பள்ளி செயலாளர் மற்றும் தாளாளர் உமரிஷங்கர் நாடார் வழிகாட்டுதலின் பெயரில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியை செல்வி மெர்லின் வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர்களுககிடையேயான பேச்சுப் போட்டி, மாறுவேடப்போட்டி, கவிதைப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

காமராஜரின் திருஉருவப்படத்திற்கு பள்ளிக்கமிட்டி உறுப்பினர்கள் லிங்கசெல்வன் நாடார்,சீனிவாசன் நாடார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர், துணை முதலவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் ஆசிரியை ரேவதி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் காமராஜ் பேரவை சார்பில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க கேடயமும்இ பதக்கமும் வழங்கப்பட்டது.
ஆசிரியை இனிகோ கர்டோசா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.












