கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா:

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலாளர் செல்வம் ஆலோசனையின்படி பல்வேறு போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

பள்ளிப் பொருளாளர் பாஸ்கரன் மற்றும், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், கண்ணன், செல்வம், பொன்ராமலிங்கம், ரவி மாணிக்கம் ஆகியோர் புளியங்குடி யில் நடைபெற்ற இந்திய அபாகஸ் நடத்திய கணித ஒலிம்பியாட் போட்டியில் மாவட்ட அளவில் 2 ம் இடம் பெற்ற 7 ம் வகுப்பு மாணவி கீர்த்தனாவுக்கு சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கி பாராட்டினார்கள்.

மாநில அளவிலான நாடார் மகாஜன சங்கம் நடத்திய காமராஜர் பிறந்த நாள் கல்வி விழா வை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட 12 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான துளிர் திறனறிவுத் தேர்வு 2024-25 ல் 42 மாணவர்கள் பங்கேற்றமையைப் பாராட்டி சான்றிதழ்களும், அறிவியல் சார்ந்த புத்தகங்களும் வழங்கினார்கள்.

பள்ளி முதல்வர் பிரபு நன்றி கூறினார்.
ஆசிரியர் கீதா ராணி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் ரேகா, சிவராணி, பிரியங்கா, கீதா ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.