+ 1 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் படு ஜாலி! ஊட்டி, ஏற்காடுக்கு இலவச இன்ப சுற்றுலா- தமிழக அரசின் குளு குளு அறிவிப்பு

+ 1 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் படு ஜாலி! ஊட்டி, ஏற்காடுக்கு இலவச இன்ப சுற்றுலா- தமிழக அரசின் குளு குளு அறிவிப்பு

போட்டோ நன்றி தினமலர்
போட்டோ நன்றி சமயம்

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கல்வி உதவித்தொகை திட்டம், இலவச பேருந்து பயணம், இலவச மிதிவண்டி, காலை மற்றும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமில்லாமல் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கி வருகிறது..
மேலும் இலவச மடிக்கணினி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த வகையில் மேலும் தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களை கோடை விடுமுறையில் நீலகிரி, ஏற்காடு போன்ற குளிர்ப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யதுள்ளது.

பிளஸ் 1 முடித்த 1500 மாணவர்கள் இதில் பயனடைவார்கள். இதில் சிறப்புப் பயிற்சி முகாம்களும் நடத்தப்படவுள்ளன.அரசின் இந்த அறிவிப்பால் இதனால் +1 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் செம்ம ஜாலியாக உள்ளனர்.

இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகமாக வாய்ப்புள்ளது.