வெளிவந்தது CBSE-2025 முடிவுகள்

                                                                                               வெளிவந்தது CBSE – 2025 முடிவுகள்

CBSE Class 12th Topper List 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் தேர்ச்சி விகிதம் 88.39% ஆகும்.

முதலிடம் –  விஜயவாடா மண்டலம்.

இரண்டாம் இடம் –  திருவனந்தபுரம் மண்டலம்.

இணையதளம்

சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

போட்டோ நன்றி பிபிசி

cbse.gov.in

cbseresults.nic.in,

results.cbse.nic.in ஆகியவற்றில் முடிவுகளை அறியலாம்.

CBSE தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?

* சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்.
* உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
* கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.

SMS மூலம் தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் “CBSE 12 (ரோல் எண்) (DDMMYYYY – பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)” என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.

போட்டோ நன்றி நியூஸ் 18

DigiLocker இல் CBSE 2025 முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

– அதிகாரப்பூர்வ DigiLocker வலைத்தளத்திற்கு செல்லவும் – digilocker.gov.in.
– 12 ஆம் வகுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் பள்ளி குறியீடு, ரோல் எண் மற்றும் உங்கள் பள்ளி வழங்கிய 6 இலக்க பாதுகாப்பு பின் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
– அனைத்து புலங்களும் நிரப்பப்பட்டவுடன், ‘அடுத்து’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
– தொடர, OTP ஐ உள்ளிட்டு “சமர்ப்பி” என்பதை அழுத்தவும்.
– உங்கள் சான்றுகளை கணினி சரிபார்த்த பிறகு, உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்.
– உங்கள் டாஷ்போர்டை அணுக “Go to DigiLocker account” என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் CBSE வாரிய முடிவு 2025 ஆவணங்கள் பிரிவின் கீழ் கிடைக்கும்.

UMANG செயலி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

UMANG செயலியைப் பதிவிறக்கவும்.
ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் லாக் இன் செய்யவும்.
CBSE வகுப்பு 12 ஆம் முடிவு 2025 ஐச் சரிபார்க்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ரோல் எண் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
திரையில் காட்டப்படும் உங்கள் முடிவைச செக் செய்யவும்