12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை காண கிளிக் செய்யவும்

                                            12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை காண கிளிக் செய்யவும்

போட்டோ நன்றி oneindia tamil

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. தற்போது தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில்
மே 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் செக் செய்யலாம்.  இதற்கான செயல்முறை இதோ:

– அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnresults.nic.in ஐத் திறக்கவும்.

போட்டோ நன்றி சமயம் தமிழ்

– HSE Exam Results 2025 என்பதைக் கிளிக் செய்யவும்
– திரையில் ஒரு உள்நுழைவு சாளரம் திறக்கும்
– பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
– முடிவு திரையில் தோன்றும். ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்
– சேவ் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

+2 பொதுத்தேர்வு முடிவுகளை SMS மூலன் அறிவது எப்படி?

அதிகமான வலைத்தள போக்குவரத்து காரணமாக, மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையத்தில் காண்பதில் சிரமம் இருந்தால் குறுஞ்செய்தி ( SMS ) மூலமாகவும் அதை தெரிந்துகொள்ளலாம். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

– SMS வடிவம்: TNBOARD12REGNO, பிறந்த தேதி
– எடுத்துக்காட்டு: TNBOARD1212345, 01/01/2008
– 09282232585 அல்லது ‪+919282232585‬ என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்
– அதன் பிறகு தேர்வு முடிவுகளை உங்கள் மொபைல் போனில் SMS மூலம் பெறலாம்.