தமிழ்நாட்டின் சிறந்த 14 பொறியியல் கல்லூரிகள்
ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து 6-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.
இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழு பட்டியல் இதோ..!
கல்லூரி பெயர் – தரவரிசையில் பெற்றுள்ள இடம்
ஐஐடி சென்னை – 1
என்ஐடி திருச்சி – 9
விஐடி வேலூர்- 11
எஸ்.ஆர்.எம். கல்லூரி (S.R.M. Institute of Science and Technology), சென்னை – 13
அண்ணா பல்கலைக்கழகம் – 14
அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை – 23
கலசலிங்கம் கல்லூரி (Kalasalingam Academy of Research and Education), ஸ்ரீவில்லிப்புத்தூர் – 36
சாஸ்திரா பல்கலைக்கழகம் (Shanmugha Arts Science Technology & Research Academy), தஞ்சாவூர் – 38
எஸ்.எஸ்.என். கல்லூரி (Sri Sivasubramaniya Nadar College of Engineering), காலவாக்கம் – 46
சவீதா கல்லூரி (Saveetha Institute of Medical and Technical Sciences), சென்னை – 64
சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology), சென்னை – 66
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) , கோவை – 67
ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி (Sri Krishna College of Engineering and Technology), கோவை – 83
வேல் டெக் கல்லூரி (Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology), சென்னை – 86












