“குமிழ்முனை வாசிப்பு வண்டியின்” பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ‘குமிழ்முனை வாசிப்பு வண்டியின்’ முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பத்து நூலகங்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல இளம் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் . எழுத்தாளர்கள் கார்முகில், சேது பாலா, பொன் கலையரசன், சுபசூரியா ரவிகுமார் , மோர்ஜியா, வசீர் அகமது , தமிழககி, பூமிகா ,ஜெய்கணேஷ், இளங்கோவன் , தர்ஷன் மற்றும் குமிழ்முனை படவரி பக்கத்தை பின் தொடர்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .
விழாவில் முக்கிய நிகழ்வாக குமிழ்முனை பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது மேலும் சமூக ஆர்வலர் விருது
செய்தியாளர் ரவி, கலைவளர்மணி சக்தி, சிறுவர் செயல்பட்டாளர் அன்புராஜ் , ராஜேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் தலா ஐந்து புத்தகங்கள்
பரிசாக வழங்கப்பட்டது.மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் குமிழ்முனை
பதிப்பகத்தின் விலையில்லா
வெளியீடான ‘நாறும்பூ நாதனும் ஒரு நாறும்’ மற்றும் ‘நீயே ஒளி ‘ஆகிய இரண்டு புத்தகங்களும் இலவசமாக கொடுக்கப்பட்டது.
மேலும் குமிழ்முனை பதிப்பகம் குமிழ்முனை வாசிப்பு வண்டியின் ஒரு வருட புகைப்பட கண்காட்சியும் வாசிப்பு உறுதிமொழி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
இறுதியாக விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் பேராசிரியர் மணிவண்ணன் கலந்துரையாடினார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் குமிழ்முனை புத்தக வண்டியின் உரிமையாளர் குமிழ்முனை சைமன் வரவேற்று பேசியும் நன்றியும் கூறினார்.












