தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனர் சண்முகம் PreALT(S) பிறந்தநாள் நிறுவனர் தினவிழாவாக கொண்டாடப்பட்டது.
நிறுவனர் தினவிழா அன்று பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சர்வ சமய வழிபாடு பள்ளியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் சாரண, சாரணியர் மற்றும் சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் அன்னாரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் சண்முகம் பண்பு நலன்களைப் பற்றிய பாடல்களும், கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டது.
சர்வ சமய வழிபாட்டில் பள்ளியின் தாளாளரும், முதல்வரும் மற்றும் நிறுவனரின் துணைவியருமான மாவட்டப் பயிற்சி ஆணையர் (சாரணியர் பிரிவு) ஜெயாசண்முகம் ALT(G), நிறுவனரின் மகள் பிரியங்கா ALT(B), சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் உதயம்மாள் HWB(B), மணிமேகலை ALT(C), ஜெபமாலை, மாரியம்மாள், செல்வபொன்னரசி, நந்தினி, கிருபா மற்றும் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், சாரண சாரணிய மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.













