தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் !


தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் நேற்று அக்டோபர் 15 ம் தேதி கொண்டாடப்பட்டது.

பள்ளியில் உள்ள அப்துல் கலாம் போட்டோவிற்கு பள்ளித் தாளாளர், முனைவர்.அருட் சகோதரி சிறு மலர், தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஹேமலதா ஜெயந்தி, ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.













