கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரயில் ஒரு நாள் கருத்தரங்கம் !

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவியும், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப அலுவலராகப் பணிபுரிந்து வரும் கனகா கலந்து கொண்டு “அணுசக்தித் துறையில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் இந்தியாவின் அணுசக்தித் துறையானது மின்சார உற்பத்தி மட்டுமின்றி, அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு மேலாண்மை, சைபர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அணுசக்தித் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருப்பதாக எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினரை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி நித்ய பிரியா அறிமுகம் செய்து வைத்தார். இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி மௌனிகாஸ்ரீ வரவேற்புரையும், இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி ஸ்ரீ மீனா நன்றியுரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி பிர்தோஸ் பாத்திமா மற்றும் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி தர்மதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி, முதல்வர், கணினி அறிவியல் துறைத்தலைவர், கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.













