பள்ளி மாணவர்களுக்கு நவீன வடிவமைப்பில் விலையில்லா மிதிவண்டி :
டிசம்பரில் வழங்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு !
பள்ளி மாணவர்களுக்கு நவீன வடிவமைப்பில் இலவச மிதிவண்டி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி நவீன மிதிவண்டி வழங்கும் திட்டத்தை வரும் டிசம்பர் மாதம் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் 5.32 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு நவீன இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.277 கோடியில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை டெண்டர் வெளியிட்டிருந்தது.

இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு நேற்று முடிவடைந்த நிலையில், டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதன்படி நவீன வடிவமைப்பில் இலவச சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி, இதுவரை வழங்கப்பட்டதை விட எடை குறைவாகவும், உறுதியாகவும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
புதிய நவீன சைக்கிள் இரவிலும் போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் ஒளிரும் வகையில் முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பிரதிபலிப்பு ‘ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும், மேம்படுத்தப்பட்ட ‘பிரேக் சிஸ்டம்’ மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகையில் பெரிய கேரியர் பொருத்தப்பட்டும் தயாரிக்க உள்ளது.

தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இலவச மிதிவண்டிகளை டிசம்பர் மாத இறுதியில் வழங்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.












