தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை சார்பில் பாராட்டு !
இன்று கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயாவில் 2025-26 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில்100/100 பெறறு முதலிடம் பிடித்த மாணவிகள் சாதனா, நிவேதா,மோகித்ரா மற்றும் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறவைத்த தமிழ் ஆசிரியை செல்வகாந்தி ஆகியோருக்கு கோவில்பட்டி முத்தமிழ் மன்றம் அறக்கட்டளையின் சார்பாக முத்தமிழ் ஆசிரியச்சிகாமணி விருதும், முத்தமிழ் அறிவுச்சுடர் விருதும் வழங்கப்பட்டது.

முதுகலை ஆசிரியர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் நிஷா ஹுசைன் முன்னிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி முத்தமிழ் மன்றம் அறக்கட்டளையின் தலைவர் வரகவி நல்லாசிரியர் முருகேசன், மன்றச் செயலாளர் தமிழ்ப்பணிச்செம்மல் நன்னெறி ஆசிரியர் டாக்டர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளித் தாளாளர் நாகமுத்து – வுக்கு அறக்கட்டளைத் தலைவர் முருகேசன் மற்றும் செயலர் பிரபு ஆகியோர் எழுதிய புத்தகங்கள் பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டன.
பள்ளியின் முதுநிலை துணை முதல்வர் சுதாகர் நன்றி கூறினார்.












