பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு : தூத்துக்குடி சி.வ.மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது !

பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு : தூத்துக்குடி சி.வ.மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது !

தூத்துக்குடி சி.வ.மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு(2026- 2028) நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட க்கல்வி அலுவலர்( தொடக்க கல்வி ) முருகேசன் தலைமை தாங்கினார், வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார் .
பார்வையாளராக ஆசிரியர் பயிற்றுனர் கணபதி கலந்து மற்றும் வட்டார கணக்காளர் வேல் முருகன் கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜுலியா பர்ணான்டோ அனைவரையும் வரவேற்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு) வனிதா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பார்வையிட்டு மறு கட்டமைப்பிற்கான வழிகாட்டுதலை வழங்கினார்கள்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின் படி மேலான பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான ஒவ்வொரு உறுப்பினரும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவராக கௌரி, துணைத் தலைவராக முத்துச்செல்வி ஆகியோரை தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்தனர்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மேலும் பள்ளியின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, கல்வித் தரம், சுகாதாரம்,மாணவர் பாதுகாப்பு போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பற்றி வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் அனைவரிடம் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி தேநீர் வழங்கபபட்டது.

இறுதியாக ஆசிரியர் பிரதிநிதி பார்வதி நன்றியுரை கூற கூட்டம் நிறைவடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை ஜான்சி, பார்வதி,கனிச்செல்வி,ஹெலன் சந்திரா காந்தா,சொர்ணலதா,மேக்டலின் மற்றும் சமுத்திர கனி ஆகியோர் செய்திருந்தனர்.