கல்வியை சுவாசிக்கும் கல்வித் தந்தைக்கு கல்விச் செய்திகள் ஆசிரியரின் நன்றிகள் 🙏

கல்வியை சுவாசிக்கும் கல்வித் தந்தைக்கு கல்விச் செய்திகள் ஆசிரியரின் நன்றிகள் 🙏

கல்வியை முழு மூச்சாக சுவாசிக்கும் கல்வித் தந்தை தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் செயலர் ஐயா ஏ.பி.சி.சொக்கலிங்கம் மற்றும் நட்பின் இலக்கணமாய் என் மீது மிகுந்த நம்பிக்கை மற்றும் பாசம் வைத்துள்ள எனது உயிர் நண்பர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர்.கல்விச் செம்மல், என்றும் எனது முதல்வர்.டாக்டர்.வீரபாகு அவர்கள் எனது உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு எனக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சையை தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு எனக்கு ஒளி மற்றும் உடல் நலனை திரும்ப மீட்டெடுக்க உதவினார்கள்.

தாயுள்ளத்தோடு பரிவுடன் என்னை வழி நடத்திய உயர்ந்த உள்ளங்களை எனது பிறந்தநாளில் ( 06 – 09 – 2026 ) வணங்கி எனது இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறந்தநாளை முன்னிட்டு நேற்று எனது மனைவியுடன் சென்று எங்களது வாழும் தெய்வங்களின் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை பெற்று வந்தோம்.

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”