தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு டாக்டர். கருணாகரன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி!

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு டாக்டர். கருணாகரன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி!

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், முதுநிலை மாணவர்களுக்கான டாக்டர்  கருணாகரன் நினைவு சொற்பொழிவு 20.08.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, துறைத் தலைவர் டாக்டர்  மாதவன்  வரவேற்புரையாற்றினார்.

டாக்டர்  ராஜாகனி நிகழ்ச்சியின் சிறப்பு வளநபரான டாக்டர். கௌதமன், உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, மேம்பட்ட ஆற்றல் பொருட்கள் மையம், SRM TRP பொறியியல் கல்லூரி, திருச்சி அவர்களை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில் மேம்பட்ட வேதியியல் மற்றும் பொருள் அறிவியல் தொடர்பான கருத்துகளை விளக்கினார். குறிப்பாக, நுண்ணறிவு பொருட்கள் (Smart Materials), ஆற்றல் மாற்றம் (Energy Conversion) மற்றும் மின்வேதியியல் உணர்திறன் கண்டறிதல் (Electrochemical Sensing) ஆகிய தலைப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர். பொன்வேல் நன்றியுரை வழங்கினார்.