தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் செயல்வழி தொழில் முனைவு பயிற்சி நடைபெற்றது !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் செயல்வழி தொழில் முனைவு பயிற்சி நடைபெற்றது !

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி தாவரவியல் துறை சார்பில், “கேக் தயாரிப்பை ஒரு தொழில்முனைவு வாய்ப்பு” என்ற தலைப்பில் செயல்வழி தொழில்முனைவு பயிற்சி 22.07.2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மெகா கேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், மகளிர் தொழில்முனைவோருமான ஜே.எப்.எம். பொறியாளர் சத்யா வளமுனைவராக கலந்து கொண்டு, டீ கேக் மற்றும் சாக்லேட் மஃபின்ஸ் தயாரிக்கும் முறையை செய்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பயிற்சி மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. மாணவர்கள் கேக் தயாரிப்பில் நேரடி செய்முறை அனுபவத்தைப் பெற்றதுடன், பேக்கரி தொழிலைத் தொடங்குவது மற்றும் திறம்பட நிர்வகிப்பது தொடர்பான தொழில்முனைவு திறன்களையும் கற்றுக்கொண்டனர்.