பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : நாளை ( 20 – 05 – 2026 ) வெளியிடுகிறார் கல்வி அமைச்சர் ராஜ் மோகன்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் :
நாளை ( 20 – 05 – 2026 ) வெளியிடுகிறார் கல்வி அமைச்சர் ராஜ் மோகன்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு!

மார்ச்/ஏப்ரல்-2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன்

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

results.digilocker.gov.in

தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

DGE Press Release – Class 10 Results – Download here

DGE Press Release – Class 10 Results