தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வீராங்கனை குழு சார்பில் “அழகி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரியில் வீராங்கனைக் குழுவின் சார்பாக மார்ச் 24, 2026 அன்று “அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ சிறப்புரை வழங்கினார். இதில் தூய மரியன்னைக் கல்லூரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ஓய்வுப் பெற்ற இணைப் பேராசிரியர் பாத்திமா பாபு முக்கிய விருந்தினராகப் பங்கேற்றார்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத் தொழிலாளிகள் வெங்கடேஸ்வரி,காளீஸ்வரி மற்றும் ஆனந்தஜோதி சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
காளீஸ்வரி தன்னுடைய அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கல்வி மற்றும் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ச்சி மிகுந்த முறையில் விவரித்தார். சக்தி பறை இசையில் இசைத்தும் பெண்களின் உள்நிலை சக்தியைக் கொண்டாடும் துணிச்சலான பாடலைப் பாடியதும் சிறப்பாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏறக்குறைய 250 மாணவிகள் பயன் அடைந்தனர்.












