தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி – நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாம் இறுதி நாளாக கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது
தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி சார்ந்த நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 68 (பெண்கள் பிரிவு) மூலம் சூசைப்பாண்டியபுரம் R.C. தொடக்கப் பள்ளியில் சிறப்பு முகாமின் இறுதி நாளை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் NSS மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினர். நிகழ்ச்சி மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன், பள்ளி நிர்வாகத் தலைவர் லாரன்ஸ், வ.உ.சிதம்பரம் கல்லூரி துறைத் தலைவர் டாக்டர் வள்ளியம்மாள், செயின்ட் ஜோசப் பள்ளித் தலைமையாசிரியர் விஜயன், தலைமையாசிரியர் அருட்சகோதரி மரியா பாக்கியம், உதவி தலைமையாசிரியர் அருள் செல்வி, ஊராட்சித் தலைவர் வின்சன் பால்ராஜ், புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர், துணை ஊராட்சித் தலைவர் யாகப்பன், ரத்னா ஏஜென்சிஸ் உரிமையாளர் தர்மராஜ் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் NSS திட்ட அலுவலருமான டாக்டர்.அரோக்கியா செல்வா சுந்தரி நன்றி உரையாற்றினார்.












