தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முனைவர்.காளிதாசன் சுப்பிரமணியன் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர் கலந்துகொண்டு பாடத்திட்டத்தின் சிறப்புகளை கூறி மாணவிகளை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் அருட்.சகோதரி முனைவர். ரூபா வரவேற்புரை நிகழ்த்த கல்லூரி செயலாளர்.அருட். சகோதரி.ரோசாகுட்டி ஜோசப் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு துறை மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன 250 மாணவிகளுக்கு பட்டங்கள் சட்டங்கள் வழங்கப்பட்டது.

மாணவிகளின் கடின உழைப்பு மற்றும் கல்வியை கற்று பிறர்க்கு கற்றுக் கொடுக்கும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பட்டமளிப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.