தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவை முன்னிட்டு அறிவாற்றல் போட்டி : குழித்துறை ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரிக்கு வெற்றிக் கோப்பை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவை முன்னிட்டு அறிவாற்றல் போட்டி :
குழித்துறை ஶ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரிக்கு வெற்றிக் கோப்பை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, தனது பவள விழாவை கொண்டாடி வருகிறது.அதனை முன்னிட்டு கலை, விளையாட்டு, அறிவு சார்ந்த போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேதியியல் துறையின் சார்பில் “Chem Platinum Fest ‘26” என்னும் தலைப்பில் 13.2.26 அன்று அறிவாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 9 கல்லூரிகளைச்b சேர்ந்த 97 மாணவர்கள் கலந்து கொண்டு, வேதியியலை மையமாகக் கொண்ட 9 அறிவாற்றல் போட்டிகள் நடைபெற்றன.

துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியரான முனைவர். மாதவன் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர வீரபாகு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.

போட்டிகள் பல்வேறு அரங்குகளில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றன. சுயநிதித் துறைப் பேராசிரியர்கள் போட்டிகளுக்கு மதிப்பீட்டாளர்களாகச் செயல்பட்டனர்.

நிறைவு விழாவில் இணைப் பேராசிரியரான முனைவர் சித்தார்த்தன் வரவேற்புரை வழங்கினார். ஒட்டு மொத்த வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழித்துறை, ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரிக்கு ரூ.5000 பணப்பரிசும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசுரூ. 3000 பணப்பரிசும், கோப்பையும் தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரி பெற்றது. இவ்விரு பரிசுகளையும் முதல்வர் வழங்கினார்.

இவ்விழா இளம் மற்றும் திறமையான மாணவர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது. இறுதியாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இணைப் பேராசிரியருமான முனைவர் முத்துசுடர்கொடி நன்றியுரை வழங்கியதுடன் விழா நிறைவுற்றது.