கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ரையான் கோப்பை 2026 க்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தென்னிந்திய அளவில் திறந்த நிலைக்கான போட்டி நடைபெற்றது.

இதில் தென் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளிலிருந்து500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 10 முதல் 14 வயதிற்கான பிரிவில் தென்னிந்திய திறந்தநிலை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கட்டாவில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி விக்னேஷ் இரண்டாம் இடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இவர் பள்ளிகள் அளவில் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் கட்டாவில் முதல் பரிசும், 40 கிலோ எடைப்பிரிவில் குமித்தேயில் 2-ம் பரிசும் பெற்றார்.

இவரைப் போல இப்பள்ளி மாணவர் விக்னேஷ் குமித்தேயில் 3வது பரிசினையும் பெற்றார். மேலும் திருச்சியில் 1.2.2026ல் நடைபெற்ற 2வது போதிதர்மர் டிராபிக்கான தென்னிந்திய அளவிற்கான திறந்தநிலை கராத்தே போட்டியில் 9 வயதிற்கான பிரிவில் இப்பள்ளி மாணவர் ஜான் மேத்யூ மூன்றாம் இடம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச்செயலர் அட்வகேட் செல்வம் வழிகாட்டுதலின்படி பள்ளி பொருளாளர் பாஸ்கர், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செல்வம் மற்றும் கண்ணன், பள்ளி முதல்வர் டாக்டர். பிரபு ஆகியோர் பரிசளித்து பாராட்டினர்.

இந்நிகழ்வில் கராத்தே மாஸ்டர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஷட்டோரியோ மற்றும் யோஷுகான் கராத்தே பள்ளிகள் செய்திருந்தனர்.