தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வாசகர் வட்டம் நிகழ்ச்சி
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக இன்று ( 30 – 01 – 2026 )வாசகர் வட்டம் நிகழ்வு-14 நடைபெற்றது.
இந்நிகழ்வில் “வாசிப்பால் உலகத்தை வசப்படுத்திடு” என்னும் தலைப்பில் நூலகத்துறைத் தலைவர் முனைவர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.

“பூக்குழி” என்னும் நூலை முதலாமாண்டு இயற்பியல் துறை மாணவி ரேசிகா , “In the Arms of the Soldier” என்னும் நூலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவன் ராமச்சந்திரன் விமர்சனம் செய்தனர்.
இலக்கிய மன்றம் சார்பாக 12.01.2026 அன்று நடத்திய கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.













