தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி SAV மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 22.01.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக செயலர் மற்றும் தூத்துக்குடி மூத்த சிவில் நீதிபதி, மாவட்ட சட்ட சேவை ஆணையம் சுபாஷினி மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர், மாவட்ட சட்ட சேவை ஆணையம் அருள் மணிராஜ் தூத்துக்குடி ஆகியோர் மாணவர்களுக்கு  போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள்,
சமூகத்தில் அதன் தீய விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி, நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடித்து, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் சிறப்பு விருந்தினரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.