தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமை வகித்தார். தூத்துக்குடி ராயல் பியர்ஸ் சிட்டி லயன்ஸ் கிளப் பட்டய தலைவர் ஸ்டான்லி வேதமாணிக்கம், செம்புலிங்கம், சாரோன் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தன்ராஜ், ராய்ஸ்டன் , சண்முகநாதன், முத்துக்குமார், இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

38வது மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ரத்னா அனைவரையும் வரவேற்றார். மாணவர்களுக்கு பொங்கல் சிறப்பு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்,கோலப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட மாணவர்கள் உள்ளிட்டஅனைவருக்கும் சக்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் ரத்னா, ஜான்சி ,ஜாய்ஸ் ,ஜான்சி ராணி,பவானி பத்மா, உஷா சாந்தினி, சத்துணவு அமைப்பாளர் சங்கரி உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார்.