கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா:
செயலர் ஜீவன் ஜேக்கப் பங்கேற்பு
கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். இளங்குமரன் எழுதிய “அறநெறி ஒரு முத்துச்சரம்” ““Righteousness A String of Pearls” புத்தகத்தின் முதல் பிரதியை கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் 11.12.2025 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வெளியிட்டார்.
கல்லூரிச் செயலாளர் தம் உரையில், இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படிப்பதற்கு ஏற்ற விதமாய் அமைந்துள்ளது. இந்நூல் வாழ்க்கை என்னும் பயணத்திற்கு மிகுந்த வழிகாட்டியாகவும், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உகந்ததாக உள்ளது. இப்புத்தகத்தில் 25 உளவியல் சார்ந்த நீதிக்கதைகள் உள்ளது. இக்கதையினை படிப்பதன் மூலம் சிந்தனைத்திறன், கற்றல் திறன், ஆகியவை வளர்கின்றன.

மேலும் நீதிக்கருத்துக்கள் படிப்பவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு, அதிலிருந்து மீள்திறன் செய்வதற்கும் ஏற்றவிதமாய் உள்ளது. இப்புத்தகம் முதல்வரின் ஒன்பதாவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது, என்று கூறினார்.
இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் நூலகர் கலந்து கொண்டனர்.













