அன்புக்கரங்கள் திட்டம் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் ரூ .2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ‘ அன்புக்கரங்கள் திட்டம் ‘ ஆகும்.
பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி , உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்க வழிவகை செய்து அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












