கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் .
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி, சுபா நகரில் உள்ள விஜய கணபதி கோவிலை சுத்தம் செய்யும் பணியை 26.08.2025 அன்று மாணவ, மாணவிகள் மேற்கொண்டனர்.

கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தை முறையாக சுத்தப்படுத்தினர். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கோவிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டினர். இதனால் வரும் காலங்களில் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தியை சுகாதாரமான சூழலில் கொண்டாட ஏதுவான சூழல் உருவானது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கீதாராணி மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
இந்த முயற்சி மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பொதுமக்கள் மாணவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.












