தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சமய நல்லிணக்க நாள் நடைபெற்றது
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வேதியியல் துறையின் சார்பாக சமய நல்லிணக்க நாள் நிகழ்வானது நடைபெற்றது.
வேதியியல் துறைத்தலைவர் முனைவர். கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார்.

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி இந்த சமயக் கருத்துகள் குறித்து சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர். செல்வஸலதா கிறித்தவ சமயக் கருத்துகளை அருமையான முறையில் உரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். மஜிதா பர்வீன் இஸ்லாம் சமயம் சார்ந்த கருத்துருக்களை தெளிவான முறையில் பகிர்ந்தார்.

இந்து சமயத்தின் புனித நூலான பகவத்கீதையை வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ராஜபிரியா, கிறிஸ்தவ சமயத்தின் புனித நூலான விவிலியத்தை வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு ஹெலன் மேன்ஸ்யா மற்றும் இஸ்லாம் சமயத்தின் புனித நூலான குரானை ஷைணஃப் நிஷா மற்றும் மும்தாஜ் ஹபீபா மூலம் சமயம் சார்ந்த பொன்மொழிகள் வாசிக்கப்பட்டன.

சமய நல்லிணக்கம் உணர்த்தும் இசைப்பாடலை தமிழ் துறை மூன்றாம் ஆண்டு மாணவி அமிர்த்வர்ஷினி இசைத்தார். மாணவிகள் அனைவரும் சேர்ந்து சமய நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வேதியியல் துறை உதவிபேராசிரியர் முனைவர். சண்முக பிரியா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப்பேராசிரியர் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.












